Department of Tamil
Home » Academics » Departments » Tamil
Departments
Department of Tamil
தமிழ்த் துறை (Department of Tamil)
தமிழ்த் துறையின் சிறப்பம்சங்கள்:
கரூர் மாவட்டத்தில் புன்னம்சத்திரத்தில் அமைந்துள்ள எழில்மிகு வளாகமாகத் திகழ்கிற விஷ்ணு கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமாக கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரிதிகழ்கிறது.இக்கல்விநிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு முதல்தமிழ்த்துறை இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் தமிழ்த்துறையின்சார்பாக அம்பை தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. மாணவர்களிடமும், தமிழ் ஆர்வலர்களிடமும் தமிழாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்துவதையும், இளம் ஆய்வாளர்களிடம் முறையான ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்தெடுப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு அம்பைத் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்த் துறையின் நோக்கங்கள் :
- தமிழ் இலக்கியங்களைப் படிப்பதினால் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை அறிந்து கொள்ளச் செய்தல்.
- சங்க கால இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், சோழர்கால இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், ஐரோப்பியர் கால இலக்கியம் எனப் பல காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளச் செய்தல்.
- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கண அறிவையும் அறிந்து கொள்ளச் செய்தல்.
- சங்க இலக்கியத்தை கற்பிக்கும்போது அக்கால மன்னர்களின் வீரம், கொடை, நட்பு, புகழ், காதல், நாகரீகம் போன்றவற்றினை தெரிந்து கொள்ளச் செய்தல்.
- புராண இதிகாசங்களை திரைப்படங்கள், குறு நாடகங்கள் நடித்தல் மூலமாக கற்கச் செய்தல்.
- கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், திட்டக்கட்டுரைகள் போன்றவற்றின் மூலம் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பிறவற்றையும் தெரிந்து கொள்ளச் செய்தல்.
- அம்பை தமிழ் மன்றத்தில் நடத்தப்படும் போட்டிகளின் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொணரச் செய்தல்.
- போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தல், நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்தல், ஆளுமைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளச் செய்தல்.
- இலக்கிய அறிவோடு கணினி அறிவையும் வளர்த்துக் கொள்ளச் செய்தல்.
- ஒவ்வொரு பருவத் தேர்வுகளிலும் 85% தேர்ச்சி விழுக்காட்டோடு இறுதி பருவத்தில் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெறச் செய்தல்.
- மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களை முனேற்றுவதோடு, பேராசிரியர்கள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கித் தங்கள் திறன்களையும் மேம்படுத்தி வருகின்றனர்.
இலக்கு :
தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமை பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.மொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வுகளைக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி அவற்றை ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு வழங்குவதும் தேவையான மரபுகளையும் மனித மதிப்புகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், நனி நாகரிகச் சமூகத்தைக் கட்டமைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களோடும் இயற்கையோடும் தம் உறவை மேம்படுத்திக் கொள்ள பயிற்சியளிப்பதும் தமிழ்த்துறையின் இலக்காகிறது.