• +918508629999 , +918508649999
  • mailus@kvcas.ac.in

KARUR VELALAR COLLEGE OF ARTS & SCIENCE

(For Women)

Affiliated to Bharathidasan University | An ISO 9001:2015 Certified Institution
ISO Certified Institution

DEPARTMENTS

தமிழ்த் துறை (Department of Tamil)

தமிழ்த் துறையின் சிறப்பம்சங்கள்

எமது கல்லூரியில் 2015ஆம் ஆண்டு  இளங்கலைத் தமிழ் துவங்கப்பட்டு, அம்பைத் தமிழ் மன்றமும் துவங்கப்பட்டது. மாணவர்களிடமும், தமிழ் ஆர்வலர்களிடமும் தமிழாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்துவதையும், இளம் ஆய்வாளர்களிடம் முறையான ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்தெடுப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு அம்பைத் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்த் துறையின் சாதனைகள்

  1. கல்லூரி இறுதிப் பருவத்தில் 100% தேர்ச்சியுடன் வேலைவாய்ப்பினையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
  2. 2017-2018 கல்வியாண்டில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்ட கலைவிழாவில் தமித்துறை மாணவிகள் நாடகத்தில் இரண்டாமிடமும், நமது கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த வெற்றிப் பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  3. 2018-2019 கல்வியாண்டில் கவியரசர் கலை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதலாமாண்டு மாணவி செல்வி.கலைவாணி கவிதைப் போட்டியில் முதலிடமும், ரூ.2000/- ரொக்கப்பரிசும் பெற்று தமிழ்த்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
  4. 2018-2019 கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட கலைவிழாவில் தமித்துறை மாணவிகள் ‘மூன்றாம் பாலினம்’ எனும் நாடகம் நிகழ்த்தினர்.
  5. 2018-2019 கல்வியாண்டில் அம்பைத் தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் செல்வி.மனோரஞ்சிதா, செல்வி.கெளசல்யா, செல்வி.கெளரி, செல்வி.தேன்மொழி, செல்வி.கோகிலா ஆகியோர் கட்டுரை வாசித்துள்ளனர். அக்கட்டுரை அக்கருத்தரங்கில் வெளியிட்ட நூலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் துறையின் நோக்கங்கள்

  1. தமிழ் இலக்கியங்களைப் படிப்பதினால் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை அறிந்து கொள்ளச் செய்தல்.
  2. சங்க கால இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், சோழர்கால இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், ஐரோப்பியர் கால இலக்கியம் எனப் பல காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளச் செய்தல்.
  3. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கண அறிவையும் அறிந்து கொள்ளச் செய்தல்.
  4. சங்க இலக்கியத்தை கற்பிக்கும்போது அக்கால மன்னர்களின் வீரம், கொடை, நட்பு, புகழ், காதல், நாகரீகம் போன்றவற்றினை தெரிந்து கொள்ளச் செய்தல்.
  5. புராண இதிகாசங்களை திரைப்படங்கள், குறு நாடகங்கள் நடித்தல் மூலமாக கற்கச் செய்தல்.
  6. கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், திட்டக்கட்டுரைகள் போன்றவற்றின் மூலம் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பிறவற்றையும் தெரிந்து கொள்ளச் செய்தல்.
  7. அம்பை தமிழ் மன்றத்தில் நடத்தப்படும் போட்டிகளின் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொணரச் செய்தல்.
  8. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தல், நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்தல், ஆளுமைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளச் செய்தல்.
  9. இலக்கிய அறிவோடு கணினி அறிவையும் வளர்த்துக் கொள்ளச் செய்தல்.
  10. இவற்றோடு ஒவ்வொரு பருவத் தேர்வுகளிலும் 85% தேர்ச்சி விழுக்காட்டோடு இறுதி பருவத்தில் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெறச் செய்தல்.

பயன்கள்

  1. மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  2. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பரிசினை வென்றுள்ளனர்.
  3. இலக்கணப்பிழைகளைச் சரி செய்யும் திறன் பெற்றனர்.
  4. கணினியில் தேர்ச்சி பெற்றல்.
  5. கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
S.No Name Qualification Designation
1
Dr.K.Nithya
MA.,M.Phil.,Ph.D., NET
Assistant professor / HOD
2
Mrs.S.Lavanya
MA.,M.Phil., TPT
Assistant Professor
3
Mr.S.Arunkumar
MA., M.Phil.,
Assistant Professor
4
Ms.P.Sudha
MA,M.Phil.M.Ed.,
Assistant professor
5
Miss.M.Bharathi
MA.,M.Phil.,(Ph.D).,
Assistant Professor
6
Miss.S.Prema
MA.,
Assistant Professor